Sri Lanka Tamil News Site

கிழக்கு மாகாண விருது வழங்கல் நிகழ்வு

- Advertisement -

-திருகோணமலை நிருபர்-

இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் நடாத்தப்படும் வருடாந்த விருது வழங்கல் நிகழ்வின் கிழக்கு மாகாண விருது வழங்கல் நிகழ்வு வைபவம்  திருகோணமலை ஜேகொப் பீச் ஹோட்டலில் நடைபெற்றது.

2019, 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகள் இவ்விருது கணிப்பீட்டுக்கான ஆண்டுகளாக அமையப்பெற்றன.

2021 ம் ஆண்டில் ஓய்வூதிய திட்டத்திற்கு 8909 பயனாளிகளை இணைத்துக்கொண்ட மட்டக்களப்பு மாவட்டம் தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

இதற்கான விருதினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பெற்றுக்கொண்டார்.

2020 ம் ஆண்டில் 3428 பயனானிகளை இவ் ஓய்வூதிய திட்டத்திற்கு இணைத்துக்கொண்ட மட்டக்களப்பு மாவட்டம் தேசிய ரீதியாக மூன்றாம் இடத்தையும், 2019 ம் ஆண்டில் 7017 பயனாளிகளை இணைத்துக் கொண்டதற்காக தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

2021 ம் ஆண்டு 100 வீத செயலாற்றுகையை இத்திட்டத்திற்கு திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் வழங்கியதற்காக விருதுகளும் வழங்கப்பட்டன.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் ஆகியோர் இவ்விருதுகளினை பெற்றுக்கொண்டனர்.

- Advertisement -

ஓய்வூதிய திட்டத்துனை சிறப்பாக நடைமுறைப்படுத்த தேவையான ஒருங்கிணைப்பு வசதிகளினை நெறிப்படுத்திய திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான எஸ்.சிறீகாந்த், என். முகுந்தன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன், ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரதேச செயலக பிரிவினடிப்படையில் பிரதேச செயலகங்கள் வழங்கிய பங்களிப்புக்காக உரிய பிரதேச செயலாளர்களுக்கும் தேசிய விருதுகளும் வழங்ப்பட்டன.

அதன்படி, 2021ம் ஆண்டுக்கான தேசிய விருதினை தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.சிறீபதி, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.ஹனீபா, கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ராசநாயகம் ராகுலநாயகி, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் சோமசுந்தரம் ரங்கநாதன் ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.

2019, 2020 ம் ஆண்டில் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றதுடன் அதற்கான தங்க விருதினை ஏறாவூர்பற்று பிரதேச செயலகமும் மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச செயலகமும் முறையே பெற்றுக்கொண்டன.

இவ்ஓய்வூதிய திட்டத்தினை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி சிறந்த அடைவுகளை பெற்ற வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான விருதினை கோரளைப்பற்று மேற்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான முஸ்த்தபா லெப்பை சியாட், சுந்தரம் காண்டீபன் மற்றும் நாவிதன்வெளி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சீனித்தம்பி சுமதி ஆகியோர் தட்டிச்சென்றனர்.

இவ்வேலைத்திட்டத்தை சிறப்பாக செயற்படுத்தி 100 வீத இலக்குகளை அடையப்பெற்ற சமூக பாதுகாப்பு சபை மாவட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களுக்கும் இதன்போது விருதுகள் வழங்கப்பட்டன.

திருகோணமலை மாவட்ட உத்தியோகத்தர் பி.சஜீகா, அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் எஸ். டி. சுதாகரன், மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர்களான ஏ. மொஹமட் அமீன், வை.எம். இனிகோ, ஏ.எஸ்.எம்.இர்சாத் ஆகியோர் இவ்விருதினை பெற்றனர்.

இந்நிகழ்வில் சமூக பாதுகாப்பு சபையின் தலைவர் சமன் ஹந்தரகமஇ பொது முகாமையாள் கே.ஏ.எஸ்.பி. கலுவாராச்சிஇ பிரதி பொது முகாமையாளர் எஸ்.டபிள்யூ. லக்‌ஷ்மன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

 

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!