கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலையீட்டில் திருக்கோணேச்சர ஆலய வளாகத்தில் கசிப்பு விற்றவர் கைது

 

இந்துக்களின் புனித பூமியான திருக்கோணேச்சர ஆலய வளாகத்தில் கசிப்பு விற்ற மாற்று இனத்தவர்,  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ஆலய வளாகத்தில் கசிப்பு விற்றுவந்த நிலையில்,  பொலிஸாரால் கைது செய்யப்பட்டு,  4000 ரூபாய் தண்ட பணம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுமிருந்தார்.

மீண்டும் அவர் திருக்கோணேச்சர ஆலய வளாகத்திற்கு திரும்பியதையடுத்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கவனத்திற்கு ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் கொண்டுவந்ததை அடுத்து, ஆளுநரின் தலையீட்டில் திருகோணமலை நகரசபை செயலாளர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் உட்பட பொலிஸார் திருக்கோணேச்சர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கடைக்கு உடனடியாக சீல் வைத்துடன்,  குறித்த நபரை அவ்வளாகத்தில் இருந்து வெளியேற்றினர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்