கிழக்கு மாகாண ஆளுநர் – இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகர மற்றும் இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் Levan S. Dzhagaryan ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு வெள்ளிக்கிழமை திருகோணமலை ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இங்கு, ஆளுநர் ரஷ்ய பட்டதாரி என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்துடனும் இலங்கையுடனும் நெருக்கமாகச் செயற்பட்டு நாட்டின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் ரஷ்யத் தூதுவர் தெரிவித்தார்.

இலங்கைக்கான மனிதாபிமான உதவியின் கீழ் ரஷ்ய கூட்டமைப்பிடம் இருந்து பெறப்பட்ட உரத்திற்கு தாம் மிகவும் நன்றிக்கடன்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்