கிழக்கு மாகாணத்தில் தடாகங்களில் மீன்பிடி

கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்களமானது கிராம மட்டங்களில் காணப்படும் நீர் வளங்களைக் கொண்டு மீன்வளர்ப்பை தடாகங்களில் மேற்கொள்பவர்களுக்கு ரூபா 50 ஆயிரம் ஊக்குவிப்பாக வழங்கி மீன்வளர்ப்பை அபிவிருத்தி செய்கின்றது

இவ்வாறு ஊக்குவிப்பினைப் பெற்று கிழக்கு மாகாண மீன்பிடி உத்தியோகஸ்தர்களின் வழிகாட்டலில் மிகச்சிறப்பாக வளர்க்கப்பட்ட மீன்தடாகமொன்றை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ராகுலநாயகியின் ஒழுங்கமைப்பில் கிழக்குமாகாண மீன்பிடிப் பணிப்பாளர் சி.சுதாகரன் கலந்துகொண்டு அறுவடை செய்யப்படும் மீன்களை பார்வையிட்டார்

சிறப்பான விளைவினைப் பெற்றுள்ள மீன்பண்ணையாளரையும் அவர் பாராட்டினார்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்