கிழக்கை மீட்க பிள்ளையானும் வியாழேந்திரனும் இணைந்தனர்!

மட்டக்களப்பின் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய இருவரது கூட்டணியில் “கிழக்கு தமிழர் கூட்டணி” உருவாகியுள்ளது.

இதற்காக உத்தியோகபூர்வமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் மட்டக்களப்பு ரிவேரா விடுதியில் இடம்பெற்றது.

இரண்டு கட்சிகளினதும் செயலாளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டனர்.

அதனைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

போலி தமிழ்தேசியம் பேசுகின்றவர்களிடத்தில் இருந்து நாங்கள் நேசிக்கும் எங்கள் கிழக்கு மண்ணை காப்பாற்ற நாங்கள் இணைந்து பயணிக்கவிருக்கிறோம் ஆகவே மக்கள் எங்களுக்கு ஆதவை தர வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கோரிக்கை விடுத்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நாங்கள் சேர்ந்து பயணிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தோம் இப்போது தான் அது கைகூடி வந்துள்ளது. இந்த கூட்டணிக்காக நாங்கள் பல தியாகங்கள் மற்றும் விட்டுக்கொடுப்புகளை செய்துள்ளோம். என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

இதன்போது இரண்டு கட்சிகளினதும் தலைவர்கள் செயலாளர்கள் கட்சியின்முக்கியஸ்தர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க