
கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.46 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்
கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த RS எக்ஸ்பிறஸ் சொகுசு பேருந்து, மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் பயணிக்கையில், முன்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியை மோதித் தள்ளியது.
இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்த சிலர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனையோர் சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை விபத்தை ஏற்படுத்திய பேருந்தை வீதியில் நின்றவர்கள் அடித்துநொறுக்க முற்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான நிலை நிலவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.