கிளிநொச்சி நீர் வழங்கல் சபையால் இரத்ததான நிகழ்வு

-கிளிநொச்சி நிருபர்-

சர்வதேச நீர் வழங்கல் தினமான மார்ச் 22 தினத்தை முன்னிட்டு தேசிய நீர்
வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வட பிராந்திய ஊழியர் தொழிற்சங்கத்தின்
ஏற்பாட்டில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின்  கிளிநொச்சி
முல்லைத்தீவு மாவட்ட அலுவலங்களின் ஊழியர்கள் நேற்று புதன்கிழமை இரத்த தானம்
வழங்கியுள்ளனர்.

நேற்று காலை கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கி கிளைக்கு சுமார் 30
வரையான ஊழியர்கள் இரத்த தானம்  வழங்கியிருந்தார்கள்.