-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி சேவை சந்தையில் நேற்று இரவு 07 கடைகள் உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாரிடம் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி சேவை சந்தையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் அசமந்த போக்காக செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் கிளிநொச்சி சேவை சந்தையின் கடைத்தொகுதிகள் எரிந்ததும் மக்கள் மனதில் சந்தேகநிலை உள்ளதாகவும், சந்தை வளாகத்தினுள் சில காவாலிகள் அநாகரிகமாக செயற்பட்டு வருதாகவும், இது தொடர்பாக பல முறை கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டும் இதுவரையில் அவர்கள் கைது செய்யப்படவில்லை எனவும் வர்த்தகர்கள் சிலர் தெரிவித்திருந்தனர்.
இன்று குறித்த கடைத்தொகுதிகளை கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமகிழ்தன் மற்றும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா ஆகியோர் சென்று நேரடியாக பார்வையிட்டனர்.
இது பலபேரின் சதியால் திட்டமிட்டே செய்யப்பட்டு வருவதாகவும், இதற்கான உடனடி நடவடிக்கை பொலிஸார் எடுக்க வேண்டும், எனவும் தெரிவித்திருந்தனர்.