கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு

-யாழ் நிருபர்-

நாட்டில் தற்போது பெய்து வருகின்ற கனமழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குளத்தின் நீர்மட்டத்தின் அளவு தற்போது 36 அடி 10.5 அங்குலத்தை தாண்டி உள்ளதுடன் குளத்தின் அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்படுகின்றன.

எனவே குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றமையால் மாவட்டத்தில் உள்ள சிறு குளங்களான கனகாம்பிகைகுளம், வன்னேரி குளம், பிறமந்தனாரு குளம் ஆகியன வான் பாய ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Minnal24 FM