கிறீன்லாந்துக்கான பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்கும் டென்மார்க்

கிறீன்லாந்துக்கான பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்கவுள்ளதாக டென்மார்க் அறிவித்துள்ளது.

ஆர்டிக் பிரதேசத்தை வாங்குவதற்குத் தாம் விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துச் சில மணிநேரங்களின் பின்னர் டென்மார்க் தங்களது அறிவிப்பை விடுத்துள்ளது.

இதன்படி, கிறீன்லாந்துக்கான பாதுகாப்பு செலவுகள் இரட்டை இலக்க பில்லியன் தொகையாக இருக்குமென டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனேவே, கிறீன்லாந்து தொடர்பில் கருத்துரைத்திருந்த டொனால்ட் ட்ரம்ப், தீவின் உரிமையும், கட்டுப்பாடும் அமெரிக்காவிற்கு அவசியமாக உள்ளதெனத் தெரிவித்தார்.

கிறீன்லாந்து டென்மார்க்கிற்கு கீழ் உள்ள ஒரு தன்னாட்சி பிரதேசமாகும். இந்தநிலையில் கிறீன்லாந்து தலைநகரில் உள்ள ஆர்டிக் கட்டளை பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நிதியுதவி அளிக்கப்படும் என டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்