கிரிபட்டி தீவில் பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு

உலகில் முதல் நாடாக மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள கிறிஸ்மஸ் தீவு என்றும் அழைக்கப்படும் கிரிபட்டி (Kiribati) தீவில் 2025ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது.

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் முகமாக அங்குள்ள மக்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆங்கில புத்தாண்டு 2025ஐ வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராக உள்ளனர்.

இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் உலகில் முதல் நாடாகப் பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபட்டி தீவில் 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்