கிராம சேவகர்கள் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில்

கிராம உத்தியோகத்தர்கள் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் கடமைகளில் இருந்து விலகி இருப்பார்கள் என கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் நாளை முதல் ஒரு வார தொழிற்சங்க போராட்டத்தை கிராமசேவகர்கள் முன்னெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்