கிராம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கிராம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கிராம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

🟤நல்ல நறுமணம் மற்றும் வலுவான சுவைக்காக அறியப்பட்ட அளவில் சிறிய ஆனால் அதே சமயம் சக்திவாய்ந்த மசாலா பொருளாக இருக்கிறது கிராம்பு. சமையல் பயன்பாட்டை தவிர பல ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருப்பதன் காரணமாக எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கிராம்பு வழங்குகின்றன. எனவே உங்கள் தினசரி டயட்டில் ஒரே ஒரு கிராம்பு சேர்த்து கொண்டால் கூட அதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் பெறலாம். அது என்னென்ன என்பதை இப்பதிவில் காண்போம்.

வாய் சுகாதாரம்

📍வாய்வழி ஆரோக்கியத்திற்கான இயற்கை மருந்தாக பல நூற்றாண்டுகளாக கிராம்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் உள்ள கிருமி நாசினிகள் வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதோடு ஈறு அழற்சி, பீரியண்டோன்டிடிஸ் மற்றும் கேவிட்டிஸ் போன்ற வாய்வழி பாதிப்புகளின் அபாயத்தைக் குறைக்கின்றன. தவிர துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை நீக்கி சுவாசத்தை புத்துணர்ச்சியாக்குக்கின்றன.

எலும்பு ஆரோக்கியம்

📍கிராம்புகளில் நிறைந்துள் மாங்கனீஸ் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும். இந்த மினரல் bone cartilage மற்றும் இணைப்பு திசுக்களை உருவாக்க உதவுகிறது. எலும்பின் அடர்த்தியை பராமரிக்க, , ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு தொடர்பான பிற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்க கிராம்புகளை தவறாமல் எடுத்து கொள்ளலாம்.

செரிமான ஆரோக்கியம்

📍செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த கிராம்பு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இவை செரிமான நொதிகளின் சுரப்பை தூண்டுவதோடு, உணவை மிகவும் திறம்பட உடைக்க உதவுகிறது. இதனால் அஜீரணம், வாயு மற்றும் உப்புசம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே தினசரி ஒரு கிராம்பு எடுத்து கொள்வது செரிமானம் சிறப்பாக இருக்க ஊக்குவிக்கும் மற்றும் வயிற்று அசௌகரியத்தை குறைக்கும்.

ரத்த சர்க்கரை அளவு

Shanakiya Rasaputhiran

📍ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க மற்றும் சீராக்க கிராம்பு உதவும் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவை இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கின்றன மற்றும் உடலில் இன்சுலின் சரியான செயல்பட உதவுகின்றன.

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்

📍கிராம்புகளில் காணப்படும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன. பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் தொற்றுகளை உடல் எதிர்த்து போராட கிராம்புகள் உதவுகின்றன. குறிப்பாக கிராம்புகளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சுவாச நோய்கள், சளி மற்றும் தொண்டை புண்களுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும்.

சுவாச ஆரோக்கியம்

📍சளியை நீக்கும் பண்புகள் கிராம்புகளில் உள்ளன. எனவே தினசரி மிதமான அளவு கிராம்புகளை எடுத்து கொள்வது இருமல், சளி மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி அறிகுறிகளை போக்க உதவும்.

சரும ஆரோக்கியம்

📍ஆன்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட கிராம்பு எண்ணெய் சருமத்திற்கு நன்மை பயக்கும். டைல்யூட்டட் கிராம்பு ஆயிலை சருமத்திற்கு பயன்படுத்துவது முகப்பருக்கள் மற்றும் வீக்கம் குறைய, தொற்றுகள் பரவாமல் தடுக்க உதவும். அதே நேரம் தினசரி கிராம்பு சாப்பிடுவது சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும்.

கல்லீரல் ஆரோக்கியம்

📍கிராம்புகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் குறிப்பாக யூஜெனோல், கல்லீரலில் இருந்து நச்சுக்களை நீக்கி அழற்சி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ் மற்றும் தீங்கு விளைவிக்கும் நச்சு விளைவுகளிலிருந்து கல்லீரலை பாதுகாத்து அதன் செயல்பாட்டை கிராம்புகள் மேம்படுத்துகின்றன.

கிராம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad