கிரான் மத்திய கல்லூரியின் கிரான் முரசு செய்தி பத்திரிகை வெளியிடப்பட்டது
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கிரான் மத்திய கல்லூரியின் கிரான் முரசு செய்தி பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியீட்டு வைக்கப்பட்டது.
கல்லூரி முதல்வர் மா. தவராசாவின் ஆலோசனையில் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களை கொண்டு மாணவர்களின் ஆளுமைகளையும், திறன்களையும் வெளிக்கொணரும் வகையில் கிரான் மத்திய கல்லூரியின் பல மன்றங்களும், கழகங்களும் அமைக்கப்பட்டது அதில் ஊடக கழகமும் ஒன்றாகும்.
அவ்வகையில் பாடசாலையின் ஊடக கழக மாணர்களினால் பாடசாலை மாணவர்களின் சாதனைகளையும் ஆக்கங்களையும் உள்ளடக்கி கிரான் முரசு செய்தி பத்திரிகை ஊடக கழக மாணவர்களினால் வெளியீட்டு வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதி அதிபர் மற்றும் உப அதிபர்கள்இ பகுதித் தலைவர் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.