கிரான் அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆங்கில முன்பள்ளியின் வருடாந்த கலை விழாவும் பிரிவுபசார வைபவமும்
கிரான் இந்து சமய வளர்ச்சி மன்றத்தினரால் நிர்வகித்து வரும் அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆங்கில முன்பள்ளியின் வருடாந்த கலை விழாவும் பிரிவுபசார வைபவமும் நேற்று செவ்வாய்க் கிழமை கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
முன்பள்ளியின் அதிபர் திருமதி வாசுமதி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகள் மலர்மாலை அணிவித்து மாணவர்களின் பாண்டு வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
இதன்போது முன்பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்துமடல் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், முன்பள்ளி மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு பாலர் பாடசாலை கல்விப் பணியக பணிப்பாளர் ரி.பத்மநாதன், கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக மாவட்ட செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.முரளிதரன் சிவஸ்ரீ பி.கஜரூபன் சர்மா, கிரான் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.செல்வசுதேசன், கல்குடா கல்வி வலய நடன ஆசிரியர் திருமதி சுகந்தினி நிறஞ்சன் ஆகியோர்கள் கலந்த கொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளைப் பருவ வெளிக்கள உத்தியோகத்தர் வி.கயல்விழி, ஓய்வு பெற்ற அதிபர்களான செல்வி பிரின்சி ஜெயவீரரெட்னம், திருமதி உருத்திரமலர் ஞானபாஸ்கரன், திருமதி தெய்வமணி சிவானந்தம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்