மட்டக்களப்பு-கிண்ணையடி ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கிண்ணையடி வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தின் இன்று காலை சுப மூகூர்த்த நேரத்தில் மகா கும்பாபிஷேக நிகழ்வு பக்தர்களின் கோவிந்தா நாமத்துடன் ஆலயத்தின் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கிரியைகளைத் தொடர்ந்து நடைபெற்றது.

கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வினை தொடர்ந்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இன்றைய நாள் ஸ்ரீதேவி, பூதேவி, சமேதமாக விஷ்ணுவிற்கும் பிள்ளையார், கருடன் பலிபீடம், நவக்கிரகம், வைரவர், மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு கும்பநீர் ஊற்றப்பட்டு கிரியைகள் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தினைத் தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேகப் பூசைகள் இடம்பெற்று 21 ஆம் திகதி புதன் கிழமையன்று கறுவாக்கேணி ஆலகண்டி சிவன் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி இடம்பெற்று சங்காபிஷேகம் நடைபெறும்.அதனைத் தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெறும்.

கும்பாபிஷேக நிகழ்வுகள் யாவும் ஆலயத் தலைவர் செ.செல்வராசா தலைமையில் ஆலயகுரு சிவஸ்ரீ க.ஜெயசீலன குருக்களின்; வழிகாட்டலில் கும்பாபிஷேக பிரதமகுரு வேதாகம குருமணி கிரியாஜோதி சிவஸ்ரீ சண்முக மயூரவதன குருக்கள் தலைமையிலான குருமார்களினால் மகா கும்பாபிஷேகம் நடாத்தப்படும்.