கிண்ணியாவில் மாதுளை தோட்ட செய்கை வெற்றி கண்டுள்ளது
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வட்டமடு கிராமத்தில் மாதுளை தோட்டச் செய்கை வெற்றியளித்துள்ளது.
குறித்த பகுதியில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் இம் முறை செய்கை பண்ணப்பட்ட மாதுளை மக்களை கவரும் வண்ணம் உள்ளதால் பலர் இதனை பார்வையிட்டு வருகின்றனர்.
கிண்ணியா வட்டமடு கிராமத்தில் முதன் முதலாக இவ்வாறான செய்கை வெற்றியளித்துள்ளதால் ஏனையோரும் இதனை முயற்சிக்கலாம் என தெரிவிக்கின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்