கிணற்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்பு

வவுனியா மூன்றுமுறிப்பு, சாச்சாங்குளம் பகுதியில் தனியாரின் காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கிணற்றில் பொருட்கள் ஏதோ இருப்பதை அவதானித்த காணி உரிமையாளர் உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து பொலிஸாரின் உதவியுடன் குறித்த கிணற்றை சோதனையிட்டபோது 14 கைக்குண்டுகளும் வேறு சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

தற்போது குறித்த இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.