கால் வலி எதனால் வருகிறது

கால் வலி எதனால் வருகிறது

கால் வலி எதனால் வருகிறது

🔷🔶கால் வலி பல காரணங்களால் வரலாம். தோல், நரம்புகள், தசைகள், மூட்டுகள், தசைநாண்கள், எலும்புகள், தசைநார்கள், இரத்த நாளங்கள் மற்றும் இணைப்பு திசு உட்பட பாதத்தின் எந்தவொரு கட்டமைப்புகளையும் பாதிக்கும் நிலைமைகளின் காரணமாக கால் வலி உருவாகலாம்.

கால்வலி வருவதற்கான காரணங்கள்
 1. விபத்துக்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் கால் வலிக்கு காரணமாகின்றன.
 2. வெளிப்பக்கத்திலுள்ள ரத்தக் குழாய்கள் பாதிப்பினாலும் கால் வலி ஏற்படலாம்.
 3. காலுக்கு அதிக உழைப்புஇ அதிக விளையாட்டு பயிற்சிஇ சுளுக்குஇ எலும்பு முறிவு ஆகிய காரணங்களால் வலி ஏற்hடலாம்.
 4. குறிப்பிட்ட நரம்பு பாதிப்பு காரணமாகவும் வலி ஏற்படலாம்.
 5. அதிக ஓட்டப் பயிற்சியினால் கால் வலி ஏற்படலாம்.
கால் வலி குணமாக பாட்டி வைத்தியம்
 1. கால் வலி மற்றும் கால் சோர்வை விரைவில் குணப்படுத்த தேன் மற்றும் எலுமிச்சை சாற்றைஇ ஒரு கப் வெதுவெதுப்பான நீருடன் குடிக்க வேண்டும்.
 2. முழங்கால்களில் வலி ஏற்படும் போது, அந்த இடத்தில் ஐஸ் கட்டிகளை வைத்து 10 முதல் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் முழங்கால் வலிகள் முற்றிலும் குணமாகும்.
 3. ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் உடன் ஒரு டேபிள் ஸ்பு+ன் காட்-லிவர் எண்ணெயை கலந்து, படுக்க போகும் முன்பு குடிப்பதால் கால் வலி குணமடையும். மேலும் உடலில் இருக்கும் சோர்வும் நீங்கும்.
 4. கால்களை நன்கு மடக்கி நீட்டுவதன் மூலமும் கால் வலியை எளிதில் குணமாக்க முடியும். மேலும் இது ஒரு சிறந்த உடற்பயிற்சி. இப்பயிற்சியை தண்ணீரை குடிக்கும் போதெல்லாம் செய்து வந்தால் கால் வலியானது வராமல் இருப்பதோடு, கால்களும் சோர்வடையாமல் இருக்கும்.
 5. கால்களானது வலி இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்க, ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் சிறிது உப்பை போட்டு, கால்களை நீரில் மூழ்கி இருக்குமாறு 15-20 நிமிடம் வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் எளிமையாக கால் வலியினைப் போக்கலாம்.
 6. பெண்கள் கால் வலியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் அதிகமான உயரம் கொண்ட காலணிகளை அணிவதால் இடுப்பு வலியுடன், கால் வலிகளும் ஏற்படுகின்றன. பெண்கள் அதிகமான உயரம் கொண்ட காலணிகளை அணியாமல் தவிர்ப்பதன் மூலம் கால் வலியிலிருந்து தப்பிக்க முடியும்.
 7. அன்றாட உணவில் கீரைகள், பழங்கள், காய்கறிகள், மூலிகை சு+ப் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 8. தினந்தோறும் அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது. கை, கால்களை நன்கு வீசி நடக்க வேண்டும்.
 9. நவதானிங்களை பயன்படுத்தி செய்யப்படும் தோசையை சாப்பிவதன் மூலம் எல்லா விதமான சத்துக்களும் உடலுக்கு கிடைப்பதால் கால் வலி மற்றும் மூட்டு வலி குறையும்.
 10. சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள வாழைத்தண்டு மற்றும் அரைக்கீரையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்பதால் கால் வலி மற்றும் மூட்டு வலி வராமல் தடுக்க முடியும்.

கால் வலி எதனால் வருகிறது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்