Sri Lanka Tamil News Site

காலில் முள் தைத்த இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

- Advertisement -

-யாழ் நிருபர்-

காலில் முள் தைத்த இளைஞன் ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

குறித்த இளைஞனுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் காலில் முள் தைத்துள்ளது.

- Advertisement -

இருப்பினும் காலில் தைத்த முள்ளினை காணவில்லை, முள் தைத்த இடத்தில் வலி மாத்திரம் காணப்பட்டது.

இந்நிலையில் அவரால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, அவர் கடந்த 09ஆந் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அராலி மேற்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த தருமராசா மதிகரன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

- Advertisement -