
காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – குருநகரில் இன்று காலை 6.45 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் தேவாலயத்தை அமைச்சர் சந்திரசேகரன் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த அனர்த்தத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவிலும் புனித கொலை விலக்கி மாதா ஆலய திருப்பண்ட அறைகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன. அத்தோடு சில படகுகளும் பகுதி அளவில் சேதமாக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு தயாராக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்