Sri Lanka Tamil News Site

காரைதீவு பிரதேச செயலக கணக்காளராக றிம்ஷியா அர்சாட் நியமனம்

- Advertisement -

-கல்முனை நிருபர்-

இறக்காமம் பிரதேச செயலகத்தில் கடந்த 08 வருடங்கள் கணக்காளராக கடமையாற்றி வந்த றிம்ஷியா அர்சாட் கடந்த திங்கட்கிழமை முதல் காரைதீவு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.

இடமாற்றம் பெற்ற கணக்காளர் றிம்ஷியா அர்சாட்டை சம்பிரதாய பூர்வமாக வழியனுப்பி வைக்கும் நிகழ்வு, பிரதேச செயலாளர் எம். எஸ். எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

- Advertisement -

இதனை தொடர்ந்து கணக்காளர் றிம்ஷியா அர்சாட், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் முன்நிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இறக்காமம் பிரதேச செயலகத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் கடந்த 08 வருடங்களாக கணக்காளராக சிறந்த முறையில் பணியாற்றியமையை கௌரவித்து பாராட்டுக்களைத் தெரிவித்து இறக்காமம் பிரதேச செயலாளரினால் வாழ்த்துரை இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்தீபன், அக்கரைப்பற்று பிரதேச செயலக கணக்காளர் சத்தார் மிர்ஸா, இறக்காமம் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல் ஹம்சார், நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமீல், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர் உட்பட இறக்காமம் பிரதேச செயலக கணக்குப் பிரிவு மற்றும் திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

- Advertisement -