காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

 

நான்கு நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கைதடி மேற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம் தனுசன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருக்கு கடந்த 23ஆம் திகதி காய்ச்சல் ஆரம்பித்தது, இந்நிலையில் சிகிச்சைக்காக கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்