காதல் விவகாரம்: பிக்குவினால் தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

தேரர் ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று ஞாயிற்று கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

பல்லேகமவில் உள்ள விஹாரை ஒன்றில் பணிபுரியும் தேரர் தனது சகோதரியுடன் காதல் தொடர்பில் இருந்த காரணத்தால் தெனியாய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கடந்த 16ஆம் திகதி  ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபரான தேரர் தெனியாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.