காதல் தம்பதிகளின் அடுத்தடுத்த மரணம்

இந்தியாவில் சேலம் அரசு மருத்துவமனையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த காதல் கணவரும் உயிரிழந்துள்ளார்.

தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்த பூபாலன் ( வயது 22 ) என்பவரே பூக்கார வட்டம் பகுதியை சேர்ந்த மேகலா (வயது 21 ) என்பவரை காதலித்து  செய்து கொண்டார். கடந்த ஓராண்டாக நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு  கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் மன உளைச்சல் அடைந்த இளைஞன் விஷத்தை அருந்தியதை அறிந்த உறவினர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதன்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறித்த நபரின் மனைவியிடம் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட மனைவி மனமுடைந்து தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவனையில் சிகிச்சையில் இருந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச் சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்