காதலி உயிரிழந்து 50ஆவது நாள்: காதலனின் தவறான முடிவு

-யாழ் நிருபர்-

யாழில் காதலி தூக்கிட்டு இறந்து 50ஆவது நாளான நேற்றைய தினம் வியாழக்கிழமை காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிங்காவத்தை, துர்க்காபுரம், தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த கதிர்காமலிங்கம் கோபிசன் (வயது – 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞரின் காதலியான தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த 50 நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இந்நிலையில் குறித்த இளைஞன் நேற்று நண்பகல் ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசேதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க