காதலியை நண்பனுக்கு விருந்தாக்கிய காதலன்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இளம் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி காதலன் நண்பருடன் இணைந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துமகூரு பகுதியைச் சேர்ந்த பாராமெடிக்கல் மருத்துவ படிப்பை முடித்த பெண்ணொருவரே இவ்வாறு வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார்.

பெங்களூரு கிரிநகரில் வசித்து வரும் புருஷோத்தம் என்பவருக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையே ஓராண்டு கால பழக்கம் இருந்து வந்துள்ளது.சில மாதங்களுக்கு முன்னர் புருஷோத்தம் இளம்பெண்ணை விரும்புவதாகவும் தனது காதலை ஏற்க வேண்டும் என கூறவே, பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

பின்னர், இருவரும் தொலைபேசியில் பழகி வந்த நிலையில், கடந்த வாரம் புருஷோத்தம் காதலியை பார்க்க துமகூருவுக்கு சென்றுள்ளார். இவரும் காதல், திருமணம் குறித்து பேசிய நிலையில் இளம்பெண்ணின் விலை உயர்ந்த செல்போனை சில நாள்கள் தனக்கு இரவல் வேண்டும் என புருஷோத்தம் கேட்டு வாங்கியுள்ளார்.

இந்நிலையில், காதலி தனது செல்போனை திரும்பி கேட்ட நிலையில் பெங்களூருக்கு வந்து வாங்கிக்கொள் என புருஷோத்தம் கூறியுள்ளார்.

காதலனின் அழைப்பை ஏற்று ஜூன் 6 ஆம் திகதி அன்று இளம்பெண் பெங்களூருக்கு சென்ற நிலையில், தனது அறைக்கு வந்துவிட்டு செல் என புருஷோத்தம் வற்புறுத்தியுள்ளார். அதை கேட்டு கிரிநகரில் இருக்கும் அறைக்கு இளம்பெண் காதலன் புருஷோத்தம் உடன் சென்றுள்ளார்.

அங்கு புருஷோத்தமின் நண்பரான சேத்தனும் அங்கிருந்த நிலையில், இளம்பெண்ணுக்கு ஜூஸ்சில் மயக்க மருந்து கொடுத்து புருஷோத்தமும், சேத்தனும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். மயக்க நிலையில் இருந்த இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் புருஷோத்தம் அறைக்கு வந்து அவரை மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு இது தொடர்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், புருஷோத்தம் மற்றும் சேத்தனை கைது செய்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்