காதலியை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு சமைத்து வழங்கிய காதலன்!

இந்தியாவில் மகாராஷ்டிராவின் மிராவில் பகுதியில் 32 வயது பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது

மகாராஷ்டிராவின் மிரா பகுதியில் உள்ள அபார்ட்மண்டின் 7வது மாடியில் ஒரு ஜோடி லிவ் இன் முறையில் 3 ஆண்டுகளாக வசித்து வந்தனர். திடீரென அந்த வீட்டில் இருந்து மிகவும் துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். பொலிஸார் மூடப்பட்டிருந்த கதவை உடைத்து பார்த்த போது துண்டு துண்டாக பெண்ணின் சடலம் கிடந்துள்ளது.

பொலிஸார், சடலத்தின் துண்டுகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் 52 வயதுடைய காதலர் மனோஜ் சாஹனி பெண்ணை கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டியது தெரியவந்தது. மேலும் சில உடல் பாகங்களை குக்கரில் வேக வைத்து நாய்க்கு உணவாக வழங்கியமையும் தெரியவந்தது.

தொடர்ந்து பொலிஸார் காதலரான மனோஜ் சாஹினியை கைது செய்து எதற்காக கொலை செய்தார் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்