
காதலியின் தாயின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய காதலன் கைது!
துப்பாக்கி முனையில் காதலியை கடத்தி சென்ற இளைஞர் ஒருவரும், அவரது நண்பரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேகாலை-தெரணியகல பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
19 வயதான குறித்த இளைஞன், மற்றொரு இளைஞனுடன், காதலியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, காதலியின் தாயின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, காதலியை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய, 17,19 வயதான இரண்டு சந்தேக நபர்கள் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.