காதலனுடன் சேர்த்து வைக்காத கணவரைக் கொலை செய்த மனைவி

இந்தியாவில் காதலனுடன் சேர்த்து வைக்க பலமுறை கேட்டும் மறுத்துவிட்ட கணவரை கொலை செய்த மனைவி மற்றும் அவரது காதலன், நண்பர் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கூரம்பட்டி கிராமத்தில் 8 மாதம் முன்பு மணம் முடித்த ராம்குமாருக்கும் சுஜாதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. சுஜாதா கணேஷ் என்ற நபருடன் காதல் ஏற்பட்டு பழகி வந்ததும் கணவருக்குத் தெரிய வந்தது.

இந்நிலையில் காதலனும், அவரது நண்பரும் இரவு குறித்த தம்பதிகளின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கணவர் முகத்தில் தலையணை வைத்து பாவாடையின் நாடாவை கழுத்தில் போட்டு இறுக்கியதாக சொல்லப்படுகிறது.

கத்தவிடாமல் குறித்த நபரின் வாயை மூடிய அவர்கள் அருகில் இருந்த கடப்பாரையை கொண்டு அவரை தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலமாக குத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் குறித்த நபர் உயிரிழந்தது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது. காதலன் மற்றும் அவரது நண்பரை தப்பிக்கவிட்டு எதுவும் தெரியாதது போல் நாடகமாடிய மனைவியை பொலிஸார் கைது செய்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்