காணாமல் போன யுவதி சடலமாக மீட்பு

நுவரெலியா ராகலை பகுதியில் நீர்த்தேக்கத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நானுஓயா பகுதியை சேர்ந்த 18 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி கடந்த மார்ச் 30 ஆம் திகதி யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அவரை தேடி மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.