காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சடலமாக மீட்பு!
-யாழ் நிருபர்-
கிளிநொச்சியில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட நபர், முறிப்பு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்த தங்கவேல் சிவகுமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி – கோணாவில் மத்தியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட குறித்த நபர், காணாமல் போனதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கிளிநொச்சி முறிப்பு குளத்தின் தடுப்பு அணையில், காணாமல் போன நபரின் துவிச்சக்கர வண்டியும் அவரது செருப்பும் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த நபரை முறிப்பு குளத்தில் தேடும் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் குறித்த குளத்தில் மிதந்த நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்