காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்பு முன்னெடுப்பு

-மூதூர் நிருபர்-

கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில்
சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை – கடற்கரை வீதியில் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் அமைப்பினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கடற்கரை வீதியிலிருந்து வெலிக்கடை தியாகிகள் நினைவிடத்தை நோக்கி பேரணி முன்னெடுக்கப்பட்ட போது பொலிஸார் பேரணியை தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இதன்போது பொலிஸாருக்கும், கவனயீர்ப்பில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டு முறுகல் நிலை தோற்றம் பெற்றது.

இதன் பின்னர் கலகம் அடக்கும் போலீசார் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

கவனியீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் போனோரின் உறவினர்கள் போர் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தரவேண்டும் உள்ளி பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு கவனயீர்ப்பு இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்து அவர்களோடு சேர்ந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர் ரஜீவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்