காட்டு யானை தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

மிஹிந்தலை – திருகோணமலை வீதியில் காட்டு யானை தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று வியாழக்கிழமை படுகாயமடைந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

மஹாகனதராவ வாவிக்கு அருகில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அநுராதபுரம் உடமலுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 54 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே காயமடைந்துள்ளார்.

இந்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் கடமைக்குச் சென்றுகொண்டிருக்கும் போது காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலுதெரிவித்தனர்.