காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

அநுராதபுரம் பிரதேசத்தில் கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.

கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று காலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள வனப்பகுதிக்கு விறகு வெட்டுவதற்காக சென்றிருந்த போது இவ்வாறு காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்