காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

வெல்லமுதாவ பகுதியில் காட்டு யானை தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திரப்பனே காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

திரப்பனே – வெல்லமுதாவ பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் விவசாய நடவடிக்கைகளுக்காக, வீட்டில் இருந்து வெளியே சென்ற பொழுது வெல்லமுதாவ பகுதியில், காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.