காட்டு யானையால் நித்திரை இன்றி, இராப்பகலாக வயல் நிலங்களை காவல்காக்கின்றோம், என இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தியாகராசா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
காட்டு யானைகளால் போரதீவுபற்றின் வெல்லாவெளி பிரதேச வேத்துசேனை, வெல்லாவெளி, காக்காச்சிவட்டை போன்ற பல கிராமங்கள் பாதிக்கப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.
அப்பகுதியில் தோண்டப்பட்டு இடைநடுவில் கைவிடபட்டுள்ள வாய்க்காலினை புனரமைப்பு வேலைகள் நிறைவுறுத்தப்படாமையால், அப் பகுதியில் உள்ள பல நூற்றுக்கணக்கான வயல் நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், அதனை திருத்தியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் கேரிக்கை விடுத்தார்.