காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம்
-நானுஓயா நிருபர்-
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ராகலை பிரதான வீதியோரத்தில் சமஹில் காட்டுப்பகுதில் நேற்று வியாழக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேவாலதென்ன, கலஹகம, ஹக்கல பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம் பெண் ஒருவரே இவ்வாறு நேற்று மாலை சடலமாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மீதான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்