
காசாவில் தொலைபேசி மற்றும் இணையச் சேவைகள் வழமைக்கு திரும்பியது
காசாவில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 24 மணிநேர மின்தடைக்குப் பின்னர் மீண்டும் தொலைபேசி மற்றும் இணையச் சேவைகள் வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளதாக பாலஸ்தீன தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிகள் தொடர்வதற்காக காசா பகுதிக்குள் நாளாந்தம் இரண்டு எரிபொருள் தாங்கிகளை அனுமதிப்பதாக இஸ்ரேல் முன்னதாக அறிவித்திருந்தது.
நீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளுக்காக குறைந்தபட்ச அளவில் எரிபொருள் வழங்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
எனினும் குறித்த எரிபொருள் தொகை ஹமாஸ் தரப்பினரை அடையாமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.