காசாவின் பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் : 100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காசாவின் டராஜில் உள்ள அல் டபின் பாடசாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த கட்டிடத்தில் தீப்பிடித்துள்ளதால் பொதுமக்கள் அங்கிருந்து தப்பமுடியாமல் அலறுகின்றனர், என அல்ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பாடசாலையை இலக்கு வைத்தே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

அதிகாலை தொழுகையில் மக்கள் ஈடுபட்டிருந்த வேளையே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்