கள்வர்களுடன் ஒன்றிணைந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தயாரில்லை

நான் அரசியலில் இருக்கவும் தயார், ஓய்வு பெறவும் தயார் எனத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, கள்வர்களுடன் ஒன்றிணைந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தயாரில்லை என்று பாராளுமன்றி தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு முடியவில்லை என்றால், நாங்கள் நாட்டை முறையாக பொறுப்பு ஏற்க தயார். அவ்வாறு செய்யவேண்டுமாயின், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும் அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.