உப்புமாவில் விஷம் கலந்து குழந்தையை கொலை செய்த கொடூர தாய்

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்தற்காக , தனது ஒன்றரை வயது குழந்தைக்கு உப்புமாவில் எலி மருந்(விஷ)தை கலந்து கொலை செய்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் குளக்கச்சி பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஜெகதீஷ் (வயது-34), மனைவி கார்த்திகா (வயது-21) இவர்களுக்கு சஞ்சனா என்ற மூன்றரை வயது பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தையும் உள்ள நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சரண், திடீரென எலிக்காக வைத்த விஷப்பொடியை சாப்பிட்டு மயக்கமடைந்ததாக தாய் கூலி வேலைக்கு சென்றிருந்த தனது கணவர் ஜெகதீஷ்க்கு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குழந்தையை மார்த்தாண்டம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் விஷப்பொடியை குழந்தையே சாப்பிட்டதற்கான அறிகுறி எதுவுமில்லை எனவும், குழந்தையின் உயிரிழப்பு சந்தேகமளிப்பதாகவும் கூறி தாய் தந்தையை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது கார்த்திகாவின் கையடக்க தொலைபேசியை ஆய்வு செய்த போது, அழைப்புகள் அழிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சைபர் கிரைம் பொலிசஸார் நடத்திய விசாரணையில் அந்த செல்போனுக்கு பல ஆண்கள் தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்தது.

மாரயபுரம் பகுதியைச் சேர்ந்த காய்கறி கடை நடத்தும் சுனில் என்பவருடன் இவர் அதிகநேரம் பேசியிருப்பதும், இந்த சம்பவம் நடந்த நேரத்தில் பலமுறை பேசியதும் தெரிய வந்துள்ளது.

சுனிலிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் கார்த்திகாவிற்கு திருமணமாகி குழந்தை இருப்பது தெரியாமல் பழகியதாகவும், அந்த தகவலை தெரிந்ததும் பேசுவதை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் கார்த்திகாவிடம் நடத்திய விசாரணைகளில் சுனிலிடம் காதலில் விழுந்துவிட்டதாகவும், இரண்டு குழந்தைகளை கொன்றால் அவன் ஏற்றுகொள்வான் என நினைத்து சந்தேகம் வராமல் இருக்க சில நாட்களாக வீட்டில் எலி தொல்லை இருப்பதாக தெரிவித்து வீட்டை சுற்றி கணவன் வாங்கி வந்த பாலிடா பொடியை எலிசாகுவதற்காக தூவி வந்துள்ளார்.

எலிக்கு மருந்து தூவுவதை ஊர்மக்கள் பார்கும்படி நடந்து கொண்டதாகவும் பின்னர் சம்பவத்தன்று குழந்தைகள் விரும்பி உண்ணும் “சேமியா உப்பு மாவில் ” கலந்து கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எலிமருந்தை உணவில் கலந்து கொடுத்தால் அவர்களது உடலில் இருந்து விஷத்தின் வாசனை வரவில்லை.

மூத்த குழந்தை குறைவாக உப்புமா சாப்பிடதால் தப்பித்து கொண்டது . இந்த விடயம் தாமதமாக தெரியவரவே மூத்த குழந்தை திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.