கள்ளக்காதலியை தீர்த்துக்கட்டிய கோவில் பூசாரி!

இந்தியாவில் தெலங்கானாவில் கோவில் பூசாரி ஒருவர் பெண்ணை கொலை செய்து சாக்கடையில் வீசியுள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் கோவில் பூசாரி சாய் கிருஷ்ணா சம்ஷாபாத் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக இருந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சம்ஷாபாத்தில் உள்ள கோவிலுக்கு அப்சரா என்ற பெண் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அபோது அப்சராவுக்கும் – சாய் கிருஷ்ணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப்பழக்கம் நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அதன்பின்னர் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில்தான் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு பூசாரி கிருஷ்ணாவை அப்சரா வற்புறுத்தியுள்ளார். ஆரம்பத்தில் பல காரணம் சொல்லி கிருஷ்ணா சமாளித்து வந்துள்ளார்.

திருமணம் செய்துக்கொண்டால் மட்டுமே இந்த உறவை தொடர முடியும் என பிடிவாதம் பிடித்துள்ளார் அப்சரா. திருமணமான கிருஷ்ணாவோ அப்சரா இருந்தால் தன் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும் எனவே அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்தப்பெண்ணை அழைத்துக்கொண்டு சோரையூர் பகுதிக்கு சென்றுள்ளார். ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத நற்குடா என்ற பகுதிக்கு அழைத்து சென்று அப்சராவின் தலையை சுவற்றில் மோதி அடித்துள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தவரின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்துள்ளார்.

உடலை அப்படியே விட்டுசென்றால் பொலிஸில் மாட்டிக்கொள்வோம் என எண்ணியவர் தாங்கள் வந்த காரிலே அப்சராவின் உடலை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் கடையில் இருந்து பிளாஸ்டிக் பை ஒன்றை வாங்கி அதில் அந்த பெண்ணின் உடலை மூட்டைக்கட்டியுள்ளார். பின்னர் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையின் மூடியை திறந்து உடலை அதில் வீசி சென்றுள்ளார்.

அதன்பின்னர் நேராக பொலிஸ் நிலையம் சென்று அப்சரா என்ற பெண்ணை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார்.

அந்தப்பெண்ணுக்கு சம்பந்தமில்லாத நபர் ஒருவர் புகார் அளித்த காரணத்தால் பொலிஸாருக்கு சாய் கிருஷ்ணா மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே சாய் கிருஷ்ணாவிடம் துருவி துருவி விசாரணை நடத்திய பொலிஸார் அவரிடம் தங்கள் பாணியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்சராவை கொலை செய்து உடலை பாதாள சாக்கடையில் வீசிவிட்டு சென்றதை சாய் கிருஷ்ணா ஒப்புக்கொண்டுள்ளார்.

சாய் கிருஷ்ணா அளித்த தகவல்களின் அடிப்படையில் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவரை சம்பவ இடங்களுக்கு அழைத்துச் சென்று நேரடி விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்