களுவாஞ்சிகுடியில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் அமரர் இரா சம்பந்தனுக்கு அஞ்சலி

 

காலஞ்சென்ற அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் அஞ்சலி நிகழ்வு இன்று சனிக்கிழமை பி.ப 4.00 மணியளவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் களுவாஞ்சிக்குடி பிரதேச குழுவின் தலைவரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் களுவாஞ்சிகுடி பேரூந்து நிலையத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில், சர்வ மத தலைவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், அரியநேந்திரன்,   பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனின் பிரத்தியேக செயலாளர் விமலநாதன் மதிமேனன் மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கிய பிரதிநிதிகள்,  பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது , இரண்டு நிமிட மௌன அஞ்சலி , அன்னாரின் திரு உருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ,  விளக்கேற்றி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்