களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு

 

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெற்றுவரும் இரத்ததான நிகழ்வானது இவ் வருடம் 5வது தடவையாகவும் இடம்பெற்றுள்ளது.

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெட்னம்  தலைமை மற்றும் வழிகாட்டுதலில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை திகதி மு.ப 8.30 மணி தொடக்கம் பி.ப 3.30 மணி வரை இடம்பெற்றது.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி என்பன இணைந்து இரத்த கொடையாளர்களிடமிருந்து இரத்த மாதிரிகளை பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்திருந்தனர்.

பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் இவ் உன்னதமான நிகழ்வில் கலந்துகொண்டு குருதிக்கொடையினை வழங்கியுள்ளனர்.

இவ் இரத்ததான நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம்  தலைமை மற்றும் வழிகாட்டுதலில் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தினரின் ஒத்துழைப்புடன் தொடர்ச்சியாக 5வது தடவையாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.