களமிறங்கினார் ஜெய்சங்கர்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை இன்று திங்கட்கிழமை காலை சந்தித்தார்.

அதன்பின்னர், கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு களவிஜயமொன்றை மேற்கொண்டார். லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துக்குச் சொந்தமான, எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கே அவர் சென்றிருந்தார்.