களத்தில் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாஸ
இன்று திங்கட்கிழமை முற்பகல் அலரி மாளிகை அருகில் அரச ஆதரவாளர்களால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அங்கு அமைதியான முறையில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து காலி முகத்திடலுக்கு சென்ற அரச ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்த கூடாரங்களை தகர்த்தெறிந்து கலகத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டு நிலைமை தீவிரமடைந்தது.
தற்போது காலி முகத்திடலில் நிலவி வரும் அமைதியின்மையை தொடர்ந்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் களத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.