கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் புனித அல்-குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பு

 

கல்முனை கிறீன்பீல்ட் முஹ்யித்தீன் மஸ்ஜிதினால் நடாத்தப்பட்டு வருகின்ற கிறீன்பீல்ட் “காதிரிய்யா” குர்ஆன் மத்ரஸாவில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மாணவர்களின் நலன்கருதி பள்ளிவாசல் நிருவாகிகள் மாணவர்களுக்கான குர்ஆன் வசதிகளைப் பெற்றுத்தருமாறு ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக Y.W.M.A பேரவையின் ஒருங்கிணைப்பில்; கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூரினால் குறித்த 70 மாணவர்களுக்கான புனித அல்-குர்ஆன் பிரதிகள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது முஹ்யித்தீன் மஸ்ஜிதினுடைய நிருவாகிகளான தலைவர் ரீ.ஏ.மஜீத், செயலாளர் எம்.எச்.ஏ.கரீம், பொருலாளர் ஏ.எம். றியாஸ், நிருவாக உறுப்பினரான எம்.இஸ்மாயில் உட்பட ஏனைய நிருவாக உறுப்பினர்கள், உஸ்தாத்மார்களான கண்ணியத்திற்குரிய பைசால் மெளலவி மற்றும் முபாறக் மெளலவி, கண்ணியத்திற்குரிய உலமாக்கள், மாணவர்கள், எம்.சீ.எம்.இஸ்மாயில், பவுண்டேசன் உறுப்பினர்கள், ஜமாஅத்தார்கள், மஹல்லாவாசிகள், ஊர்பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்