Sri Lanka Tamil News Site

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் அணிவகுப்பு மரியாதை

- Advertisement -

-கல்முனை நிருபர்-

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2022 ஆண்டிற்கான அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று திங்கட்கிழமை கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானம் மற்றும் பொலிஸ் நிலையத்தில்இடம்பெற்றது.

இந்நிகழ்வானது கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்பார்வையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றது.

- Advertisement -

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெயந்த ரத்னாயக்க கலந்து கொண்டு அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.

மேலும் பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை பிரிவு நிலையங்கள் சுற்று சூழல் பொலிஸ்உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகளை பார்வையிட்டதுடன் பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் சவளக்கடை, சம்மாந்துறை ,பெரியநீலாவணை, காரைதீவு, சாய்ந்தமருது, பொலிஸ் நிலைய பொலிஸாரும் இணைந்திருந்தமை குறிப்படத்தக்கது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!