கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் ஆசிரியர் மாசிலாமணி பார்வதி பணியில் ஓய்வு

-மட்டக்களப்பு நிருபர்-

மாசிலாமணி பார்வதி கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் ஆசிரியராகப் பணியாற்றி இன்று சனிக்கிழமை கல்விப் பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்.

மணி நித்திலம் என அழைக்கப்படும் நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், நிந்தவூர் அல்.மஸ்லம் பாடசாலையில் ஆரம்ப, இடைநிலைக் கல்வியினையும், கல்முனை அல்.அஸ்ரக் தேசிய பாடசாலையில் உயர் கல்வியினையும் கற்றார்.

சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரியில் தமிழ் டிப்ளோமா கற்கை நெறியினைப் பூர்த்தி செய்திருந்த இவர், 20.03.1990 இல் விசேட கல்விக்கான ஆசிரியர் நியமனத்தைப் பெற்று கமு அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தில் கடமையேற்றார். விசேட கல்வி தவிர இந்துசமயம், தமிழ், தமிழ் இலக்கியம், இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் நாட்டம் கொண்ட இவ்வாசிரியர் மேற்படி துறைகளிலும் மாணவர்களை வழிநடாத்திச் சென்றார்.

மாசிலாமணி பார்வதி கல்முனை அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயம், கல்முனை நிந்தவூர் அல்.அஸ்ரக் தேசிய பாடசாலை, திருகோணமலை ஸ்ரீ இராமகிருஸ்ணாக் கல்லூரி (தேசிய பாடசாலை), கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை ஆகியவற்றில் 34 வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.

கற்பித்த பாடசாலைகளில் மாணவர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஆசிரியராக திகழ்ந்த இவருக்கு, ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேசனால் 22.06.2021 இல் “சிறந்த ஆசிரியர்” விருதும் வழங்கப்பட்டமை இவரின் கல்விப் பணிக்கு உயர்ந்த கௌரவத்தை அளித்துள்ளது.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்